Friday, June 27, 2008

(ரொம்ப) பெரீரீரீய திருப்புமுனை :-)

நம்ம சர்வேசன் அண்ணன் அவுங்கவுங்க வாழ்க்கையில நடந்த திருப்புமுனைகளை பத்தி பதிவு போட சொல்லியிருந்தாரு. சரி, நாமளும் போட்டுடலாம்னு முடிவு பண்ணி யோசிச்சா, எந்த திருப்புமுனைய பத்தி போடுறதுன்னு ஒரே குழப்பம். ஏன்னா, நம்ம வாழ்க்கையில தான் ஏகப்பட்ட திருப்புமுனைய பார்த்தாச்சே? சரி, சமீபத்துல (1962லலாம் இல்லை!) , இன்னைக்கி காலையில நடந்த ஒரு நிகழ்ச்சிய சொல்றேன்... ரொம்பவே நெகிழ்ந்துடுவீங்க...

காலையில ஆபிஸ்க்கு வீட்ல இருந்து கிளம்பி பைக்குல வந்துட்டு இருக்கும்போதே மனசில சின்னதா ஒரு சஞ்சலம். என்னமோ இன்னைக்கி நடக்க போகுதுன்னு. சரி, பாத்துக்கிலாம்னு போயிட்டு இருக்கும்போது, நம்ம பக்கத்து வீட்டு பையன் ரோட்ல நடந்து போயிட்டு இருக்கான். அவன் கழுத்துல பாக்குறேன். எனக்கு ஒரே அதிர்ச்சி.


அவன் ஸ்கூல் ஐடி கார்டு மாட்டி இருக்கான். சரி, நம்ம பாக்கெட்டுல ஐடி இருக்கான்னு பார்த்தா, இல்ல. போச்சுடா, மறந்துடோம் போல'ன்னு வீட்டுக்கு திரும்ப வேண்டியதா போச்சு. அப்ப, வண்டியில திரும்பினேன் பாருங்க... அதுதான் இன்னைக்கி என் வாழ்க்கையில நடந்த பெரிய திருப்புமுனை. 360 டிகிரினா சும்மாவா? அதுக்கு அந்த பையன்தான் காரணம். அவனுக்கு இந்த பதிவு மூலம் என் நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அவன் எப்ப பெரியவனாகி இத வந்து படிக்க போறானோ?


நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு சும்மாவா சொன்னாங்க? வீட்டுக்கு போனபெறவு தான் அது எவ்ளோ உண்மையின்னு எனக்கு தெரிஞ்சது. வீட்டுக்கு உள்ள நுழைஞ்சா, என் டூத்ப்ரேஷ் டிவி டேபிள் மேல இருக்கு. அப்பத்தான் நான் இன்னைக்கி பல் தேய்க்காம மறந்து ஆபிஸ் கிளம்புனது ஞாபகம் வருது. (ச்சி... அதான் சாப்டும்போது வாய் நமநமன்னு இருந்திச்சா?). ச்சே... நம்ம திருப்புமுனை நமக்கு எம்மாம் பெரிய விஷயத்த ஞாபக படுத்திருக்குன்னு நினைச்சிக்கிட்டே பல் தேய்ச்சேன்.


பின்ன என்னங்க? எப்ப பாரு, பதிவு போடுறத பத்தியே நினைச்சிகிட்டு இருந்தா இப்படி தான் ஆகும். சில பேரு கனவுல எல்லாம் பதிவு போடுறாங்களாம். காரணம் ஒன்னுதாங்க. பிளாக்கர், வோர்ட்ப்ரெஸ் கணக்குல இருந்து ஆபிஸ் இன்டர்நெட் வரை எல்லாம் ஓசி. ஒரு வேளை, கூகிள் "பணவீக்கம் அதிகமாயிடுச்சு... இனி அக்கௌன்ட் ஓசியா தரமுடியாது. ஒரு கணக்குக்கு ரெண்டு டாலர்தான்" சொன்னா இங்க ஒரு பயபுள்ள இருக்கமாட்டான். தமிழ்மணத்துல ஈ கும்மி அடிச்சி டான்ஸ் ஆடும். அப்புறம் எங்க, பதிவு எழுதி சமூகத்த புரட்டி போடுறது? :-)


சரி, திருப்புமுனைக்கு வருவோம். சர்வேசன் அண்ணன் "திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க"ன்னு கேட்டு இருந்தாரு. என்ன ஆயிருக்கும்? ரோட்டுக்கு அந்த பக்கம் BSNL க்காரன் தோண்டியிருந்த குழிக்குள்ள விழுந்திருப்பேன். அப்பாடி! சுவாரஸ்யமா, உண்மைய சொல்லியாச்சு.


இதுப்போல நான் பல திருப்புமுனைகளை சந்திச்சிருக்கேன். உதாரணமா, ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி போறப்ப, ஒரே நாள்'லே பல டர்னிங் பாயிண்ட்'கள பார்த்துருக்கேன். அந்த மாதிரி, சமீபத்துல, கன்னியாகுமரி போனப்ப, விவேகானந்தர் பாறை போயி திரும்பி வருரத நம்ம நாட்டின் திருப்புமுனையா எடுத்துக்கிலாம்'ங்கறத கண் கூடா பார்த்தேன். ஆனா இங்கெல்லாம், திருப்புமுனையில அந்த பக்கம் திரும்பி இருந்தா என்ன ஆயிருக்கும்?'ங்கறத நினைச்சா ஒரே கலவரமா இருக்கு. :-)

26 comments:

SurveySan said...

கிர்ர்ர்ர்ர்ர் :)

இவன் said...

ங்ண்ணா என்ன இருந்தாலும் இந்த கொல வெறி கூடாதுங்கண்ணா

மங்களூர் சிவா said...

/
சில பேரு கனவுல எல்லாம் பதிவு போடுறாங்களாம். காரணம் ஒன்னுதாங்க. பிளாக்கர், வோர்ட்ப்ரெஸ் கணக்குல இருந்து ஆபிஸ் இன்டர்நெட் வரை எல்லாம் ஓசி. ஒரு வேளை, கூகிள் "பணவீக்கம் அதிகமாயிடுச்சு... இனி அக்கௌன்ட் ஓசியா தரமுடியாது. ஒரு கணக்குக்கு ரெண்டு டாலர்தான்" சொன்னா இங்க ஒரு பயபுள்ள இருக்கமாட்டான். தமிழ்மணத்துல ஈ கும்மி அடிச்சி டான்ஸ் ஆடும். அப்புறம் எங்க, பதிவு எழுதி சமூகத்த புரட்டி போடுறது? :-)
/

சரியா சொன்னீங்க!!!

:)))))))))))))

மங்களூர் சிவா said...

/

சரி, திருப்புமுனைக்கு வருவோம். சர்வேசன் அண்ணன் "திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க"ன்னு கேட்டு இருந்தாரு. என்ன ஆயிருக்கும்? ரோட்டுக்கு அந்த பக்கம் BSNL க்காரன் தோண்டியிருந்த குழிக்குள்ள விழுந்திருப்பேன்.
/

:))))))))))))))

இவன் said...

//அதுதான் இன்னைக்கி என் வாழ்க்கையில நடந்த பெரிய திருப்புமுனை. 360 டிகிரினா சும்மாவா? //
ஆமா பெரிய திருப்பு முனைதான்

rapp said...

சூப்பர் பதிவு. சர்வேசன் சார விஜய் ஆகவும், உங்களை பேரரசாகவும் கற்பனை பண்ணி பார்க்கிறேன். ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் என் கண்ணுல தெரியுது. விஜய்க்குத் தேவையான அத்தனை டர்னிங் பாயிண்டும் படத்துல இருக்கு. வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

இந்தப் பதிவைப் படிச்சிட்டு சர்வேசன் சார் என்ன நினைச்சிருப்பார்னா!!!!

( இனிமே பதிவு போட ஐடியா கொடுப்பேனா! கொடுப்பேனா!)

சரவணகுமரன் said...

என்ன சர்வேசன்? ஏண்டா இத எழுத சொன்னோம்னு நினைக்கிறீங்களா?

சரவணகுமரன் said...

இவன்,

லூஸ்'ல விடுங்க...

சரவணகுமரன் said...

//ஆமா பெரிய திருப்பு முனைதான்

:-)

சரவணகுமரன் said...

rapp, வாழ்த்துக்களுக்கு நன்றி.

சரவணகுமரன் said...

//இந்தப் பதிவைப் படிச்சிட்டு சர்வேசன் சார் என்ன நினைச்சிருப்பார்னா!!!!

ஒருவேளை, ஆள்காட்டி விரல நெத்திக்கு நேரா காமிச்சி 'உனக்கு இது தேவையா?' கேட்டுயிருப்பாரோ? :-)

கிரி said...

//ரோட்டுக்கு அந்த பக்கம் BSNL க்காரன் தோண்டியிருந்த குழிக்குள்ள விழுந்திருப்பேன். அப்பாடி//

:-))))))

சரவணகுமரன் said...

நன்றி, கிரி...

CVR said...

:-)))))))))))))
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு!!

உங்கள் வலைப்பூவில் மற்ற சில இடுகைகளையும் படித்தேன்!!
நன்றாக இருந்தது!
வாழ்த்துக்கள்!! :-)

சரவணகுமரன் said...

நன்றி cvr...

Sathiya said...

ஐய்யோ ஐய்யோ! இந்த மாதிரி ஒரு பயங்கரமான உலக வலைப்பதிவுகளில் முதல் முறையா ஒரு திருப்புமுனையை இப்போதான் படிக்கிறேன்;)
//அப்பத்தான் நான் இன்னைக்கி பல் தேய்க்காம மறந்து ஆபிஸ் கிளம்புனது ஞாபகம் வருது//
இன்னைக்கு ஒரு நாள் திருப்புமுனையால பல் தேய்ச்சிட்டீங்க! மத்த நாள் எல்லாம்?;)

சரவணகுமரன் said...

//ஐய்யோ ஐய்யோ! இந்த மாதிரி ஒரு பயங்கரமான உலக வலைப்பதிவுகளில் முதல் முறையா ஒரு திருப்புமுனையை இப்போதான் படிக்கிறேன்;)

நம்ம திருப்பு(தெரு)முனை அப்படி...

//இன்னைக்கு ஒரு நாள் திருப்புமுனையால பல் தேய்ச்சிட்டீங்க! மத்த நாள் எல்லாம்?;)

ஆமாம் இல்ல? :-)

ராமலக்ஷ்மி said...

சரவணகுமரன் said...
//என்ன சர்வேசன்? ஏண்டா இத எழுத சொன்னோம்னு நினைக்கிறீங்களா?//

அவர் பாவம் கிர்ர்ர்ர்ர்ர்'னுட்டுப் போயிட்டார், ஆவலுடன் படிக்க வந்த எங்களுக்கு...:(! Anyway, சத்யாவின் பதில் ஒரு அல்ப சந்தோஷத்தைக் கொடுத்தது:)!

MyFriend said...

நான் round-a-boutல மூனு-நாலு தடவை சுத்துவேனே.. அப்போ 1480 டிக்ரீ எல்லாம் ட்ர்ன் பண்ணியிருக்கேன்னு சொல்லலாமா? ;-)

உங்க பதிவு கலக்கல். :-)

சரவணகுமரன் said...

//Anyway, சத்யாவின் பதில் ஒரு அல்ப சந்தோஷத்தைக் கொடுத்தது

பதிவு எழுதுறதே இந்த அல்ப சந்தோஷத்துக்குதானே? அப்புறம் என்ன? :-)

சரவணகுமரன் said...

மை ஃபிரண்ட்,

1480 டிக்ரீயா? அப்ப நீங்க பெரிய ஆளுதான்...:-)

விட்டா, பொருட்காட்சியில ராட்டினம், கொலம்பஸ்'ல எல்லாம் சுத்துனத சொல்லுவீங்க போல... :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. இதுக்காக தினம் உங்களுக்கு திருப்பு முனைவரனும்ம்னு சொல்லனும்போல பல்லு தேய்க்கறதுக்காகவாவது...

@மைப்ரண்ட் எல்லாத்துலயும் நீ தான் உசத்தின்னு அடிக்கடி நிரூபிக்கரேப்பா..

MyFriend said...

//சரவணகுமரன் said...

மை ஃபிரண்ட்,

1480 டிக்ரீயா? அப்ப நீங்க பெரிய ஆளுதான்...:-)//

சின்ன பொண்ணுப்பா. ;-)

// விட்டா, பொருட்காட்சியில ராட்டினம், கொலம்பஸ்'ல எல்லாம் சுத்துனத சொல்லுவீங்க போல... :-)//

ஆமா.. ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி குமரா. :-)

சரவணகுமரன் said...

//ம்.. இதுக்காக தினம் உங்களுக்கு திருப்பு முனைவரனும்ம்னு சொல்லனும்போல பல்லு தேய்க்கறதுக்காகவாவது...

:-)

சரவணகுமரன் said...

//ஆமா.. ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி குமரா. :-)

உடனே அதை பத்தி (டெல்லி அப்பளம், மிளகா பஜ்ஜி, ராட்டினம், பெண் தலை பாம்பு அப்படின்னு...:-)) ஒரு பதிவ போடுங்க...